search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி அடித்துக் கொலை"

    பளுகல் அருகே தகராறில் விவசாயியை அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    குழித்துறை:

    களியக்காவிளை அருகே பளுகல் இடைக்கோடு காஞ்சிரதட்டு விளையை சேர்ந்தவர் சுபின் (வயது 31). கட்டிட தொழிலாளி.

    இவரது வீட்டின் முன்பு நின்ற சந்தன மரம் ஒன்றை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருட்டுபோனது. இது தொடர்பாக சுபின் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் செல்வதாசுடன் தகராறில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி செல்வதாஸ் தனது மாடு ஒன்றை அந்த பகுதியில் கட்டி இருந்தார். அதை சுபின் பிடித்துக்கொண்டு தனது வீட்டின் அருகே கட்டினார்.

    இதை தட்டி கேட்பதற்காக செல்வதாஸ் அங்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுபின் உறவினர் செல்வதாசை கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செல்வதாஸ் பலத்த காயம் அடைந்தார்.

    அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செல்வதாஸ் தாக்கப்பட்டது குறித்து பளுகல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சுபின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சுபின் தலைமறைவாகி விட்டார்.

    இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செல்வதாஸ் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வதாஸ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    செல்வதாஸ் பலியானதை அடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பலியான செல்வதாசின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

    திருமங்கலம் அருகே விவசாயி அடித்துக் கொல்லப்பட்டார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரையூர்:

    திருமங்கலத்தை அடுத்த சிந்துப்பட்டி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் மொக்கமாயன் (வயது 42) விவசாயி.

    குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து குடும்பத் தினருடன் சண்டை போடுவார். இதனை மொக்கமாயனின் தந்தை காசிமாயன் நேற்று முன்தினம் கண்டித்தார்.

    சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் மொக்கமாயன் வி‌ஷம் குடித்து விட்டார் என அவரது மனைவி சத்தம் போட்டார். உடனே அவரை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மொக்கமாயன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே மொக்கமாயனின் தாயார் பேச்சியம்மாள் சிந்துப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகனின் நெற்றியிலும் உடலில் சில பாகங்களிலும் காயம் இருந்தது. எனவே அவரை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் மொக்கமாயனின் மனைவி முத்து, அவரது உறவினர் ஜோன்ஸ் மற்றும் காசிமாயன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×